கனடாவுக்கு வரும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
இதன்மூலம், தற்காலிக விசாவில் கனடாவுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமானவர்களே தற்காலிக குடியேறியவர்களாக இருந்துள்ளனர்.
ஆனால், தற்போது கனேடிய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் தற்காலிகமாக குடியேறியவர்களாக உள்ளனர்.
எனவே, இதை நாம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடத்தில் விசிட்டர் விசாவில் இலங்கையர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.