ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர் குவீன்ஸ்லந்து மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது ஜொயெல் கௌகி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சிட்னியில் பொருள்களை வைத்துக்கொள்ள ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்திருந்த நிலையில், அவர் மேற்கொண்ட தாக்குதலில் 5 பெண்களும் 1 ஆணும் உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட நபர் மனநல பிரச்சினைகளால் அந்தத் தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்குத் தகவல் சொல்ல பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.