செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அடுத்த போப் யார்? மே 7 மாநாடு கூடும் என்று வத்திக்கான் அறிவிப்பு!

அடுத்த போப் யார்? மே 7 மாநாடு கூடும் என்று வத்திக்கான் அறிவிப்பு!

1 minutes read

போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ள அடுத்த போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ செயல்முறை அல்லது மாநாடு, எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு போப் போட்டியிடலுக்குத் தகுதியான கார்டினல்களின் எண்ணிக்கை 135 ஆகும்.

இவர்களில், 53 கார்டினல்கள் ஐரோப்பாவிலிருந்தும், 23 பேர் ஆசியாவிலிருந்தும், 20 பேர் வட அமெரிக்காவிலிருந்தும், 18 பேர் ஆப்பிரிக்காவிலிருந்தும், 17 பேர் தென் அமெரிக்காவிலிருந்தும், நான்கு பேர் ஓசியானியாவிலிருந்தும் தகுதி பெற்றுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள 71 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போப்பாண்டவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கார்டினல்கள் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

வத்திக்கானின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, பூமியில் மிகவும் இரகசியமான வாக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

வெளி உலகத்திலிருந்து விலகி நடைபெறும் தவக்கால சடங்குக்காக சிஸ்டைன் தேவாலயம், நேற்று (28) முதல் மூடப்பட்டுள்ளது.

தங்கள் தனித்துவமான சிவப்பு அங்கிகளை அணிந்து வாக்களிக்க வரும் கார்டினல்களின் வாக்குச் சீட்டுகள், போப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

1800களில் இருந்து வரும் இந்த பாரம்பரியம், வாக்களிப்பின் இரகசியத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியல் செல்வாக்கிலிருந்து தேவாலயத்தைப் பாதுகாப்பதயும் நோக்கமாக கொண்டுள்ளது.

தெரிவுக்குப் பிறகு, வாக்குச் சீட்டுகளை எரிப்பதன் மூலம் வெளியுலகிற்கு ஒரு போப் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளிவந்தால், அது கார்டினல்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் ஒரு புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

அடுத்த போப்பான வரக்கூடியவர்களின் சாத்தியப் பட்டியலில் இலங்கையின் பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.