இந்தியா – மகாராஷ்டிரா மாநிலத்தின் கும்ப நீர்வீழ்ச்சியின் அருகே ‘reels’ பதிவு செய்யும்போது, சமூக ஊடகப் பிரபலம் ஆன்வி கம்டார் (Aanvi Kamdar) தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த அசம்பாவிதம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
27 வயது ஆன்வி கம்டார், தமது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்குச் சென்று பாறைகளில் கால் தவறி 300 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக Times of India குறிப்பிட்டுள்ளது.
தேடல், மீட்புக் குழுவினர் அவரை 6 மணி நேரம் தேடினர். அவர் கண்டுபிடிக்கப்பட்டபோது உயிருடன் இருந்தார். எனினும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு ஆன்வி கம்டார் உயிரிழந்தார்.
அவர் பயண இடங்கள், உணவு, வாழ்வியல் சம்பந்தபட்ட காணொளிகளை @theglocaljournal எனும் Instagram கணக்கில் பதிவிடுவதில் மும்முரமாக ஈடுபட்டார். @theglocaljournal Instagram கணக்கை 324,000 மக்கள் பின்தொடர்கின்றனர்.
சமூக ஊடகப் பிரபலம் ஆவதற்குமுன் இவர், கணக்காளராகப் பணிபுரிந்தார் என்றும் Times of India குறிப்பிட்டுள்ளது.