நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.
கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் அரசியல் பயணம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அறிய அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
அத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இம்மாநாட்டை உற்றுநோக்கியுள்ளதால் மாநாடு தனிச்சிறப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டியில் இன்று காலை முதல் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.