நேற்றைய முதலாவது த.வெ.க. மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். அப்போது தி.மு.க.தான் அரசியில் எதிரி என்பதை தெளிவிப்படுத்தினார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், நடிகர் விஜயின் அரசியல் கட்சி தொடர்பில் பேசியுள்ளார்.
“இப்போ திருப்பி ஆரம்பிச்சாட்டங்க, தப்பே இல்ல. புதுசு புதுசா வரட்டும். நமக்கும் போர் அடிக்கிது. பழைய முகத்தை பார்த்து எவ்வளவு நாள்தான் டைம் பாஸ் பண்றது. நமக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகணும்ல்ல. நாம் பார்க்காதவர்களா? எத்தனை முகங்களை பார்த்திருக்கிறோம். அத்தனை முகங்களையும் பார்த்து, மக்கள் அனைவரின் மனதை பிடித்த ஒரே கட்சி என்றால் அது தி.மு.க.தான். தொடர்ந்து மக்கள் சேவை செய்வதனால் மக்களை நம்மை விரும்பிகிறார்கள்” என இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இதேவேளை, “நேற்று நடைபெற்ற த.வெ.க மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு” என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.