பிரேஸிலில் கழுகு ஒன்று, விமானி அறையின் ஜன்னலின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்து மோதியதில் விமானியும் பயணிகளும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (05) இடம்பெற்றதாக Hindustan Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜன்னலின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்து மோதிய கழுகு, பயணத்தின்போது விமானியின் முன்னாள் தொங்கிக்கொண்டிருந்துள்ளது.
குறித்த விமானத்தில் 5 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அமசோன் காடுகளில் இருக்கும் Envira பகுதியிலிருந்து Eirunepé பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
சம்பவத்தின் காரணமாக விமானியின் பார்வை தடைப்பட்டது. எனினும், விமானி கட்டுப்பாட்டை இழக்காமல், விமானத்தைப் பத்திரமாக ஐரியூன் விமான நிலையத்தில் தரையிறக்கினார். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமான நிலையத்துக்கு அருகே குப்பை நிரப்புமிடம் இருப்பதால் அப்பகுதியில் அதிகமான கழுகுகள் வரும் என்று விமானி தெரிவித்துள்ளார்.