கிரிஸ்டல் பேலஸ் பகுதியில் குழாய் வெடித்ததால், தெற்கு இலண்டனில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் விநியோகம் குறைந்துள்ளன.
இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ள Thames Water நிறுவனம், கசிவுக்கான மூலத்தை பொறியாளர்கள் கண்டுபிடித்து, தண்ணீர் விநியோகத்தை மீட்டெடுக்கவும், விரைவில் குழாயை சரிசெய்யவும் பணிபுரிகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
குறைந்த அழுத்தம் அல்லது தண்ணீர் இல்லாத பகுதிக்குள் 11 பராமரிப்பு இல்லங்கள் மற்றும் 29 பாடசாலைகள் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.