மலேசியாவில் கிறிஸ்மஸ் மரம் ஒன்று விழுந்ததில் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம், கோலாலம்பூரில் உள்ள Pavilion கடைத்தொகுதியில் நேற்று கிறிஸ்மஸ் தினத்தில் (25) இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் பிரஜை ஒருவர் தனது மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு திரைப்படம் பார்க்க வந்த வேளையில், மேலே கூரையில் தொங்கிக்கொண்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் எதிர்பாரா விதமாக அவர் தலையில் விழுந்துள்ளது.
இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.
அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு சிங்கப்பூர் பிரஜை கொண்டுசெல்லப்பட்டார்.
இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்தைவிட்டு, கிறிஸ்துமஸ் மரம் அகற்றப்பட்டதாகவும் அந்த இடம் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.