செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்கனடா வீட்டு வாடகையை சமாளிக்க விமானத்தில் சென்று படிக்கும் மாணவன்!

வீட்டு வாடகையை சமாளிக்க விமானத்தில் சென்று படிக்கும் மாணவன்!

1 minutes read

வீட்டு வாடகையை சமாளிக்க பல்கலைக்கழக மாணவன் ஒருவர் விமானத்தில் சென்று படித்து வரும் விடயம் கனடாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதாவது, கனடா – வான்கூவரில் மிக அதிக வீட்டு வாடகை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வாரத்திற்கு இரண்டு முறை பல்கலைக்கழகத்திற்கு குறித்த மாணவன் விமானத்தில் சென்று படித்து வருகின்றார்.

கனடாவில் உள்ள Calgary மற்றும் Vancouver நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் சுமார் 700 கிலோமீட்டர்கள் ஆகும்.

குறித்த மாணவன், வான்கூவரில் மிக அதிக வாடகையால் பாதிக்கப்பட்டார். இதனால் இவ்வாறு அதிக வாடகையை செலுத்துவதை விட, அவர் தினமும் விமானத்தில் சென்று வகுப்புகளில் கலந்துகொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, இம் மாணவர் டிம் சென் (Tim Chen),கொலம்பியா பல்கலைக்கழகத்தின் (UBC) வாரத்திற்கு இரண்டு முறை கால்கரியில் இருந்து வான்கூவர் வரை விமானத்தில் பயணம் செய்து தற்போது ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

டிம் சென், தனது அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

வான்கூவரில் Single Bedroom வீடு வாடகைக்கு சுமார் 2,100 US Dollar செலவாகும். சென், ஒவ்வொரு விமான பயணத்திற்கு வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு தலா 150 US Dollar செலவழிக்கிறார்.

அதன்படி, அவரது மாதாந்த பயணச் செலவுகளை 150 X 8 என 1,200 US Dollar செலவழிக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More