பிரிட்டன் பொருளாதாரம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 2 % குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 23 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு முந்தைய மாதத்தைவிட 5 . 8 % குறைந்தது.
இந்நிலையில் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2 % குறையும் எனத் தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சேவைத்துறை, கட்டுமானத் தொழில், கல்வி, வாகனத் தொழில், உணவகங்கள் ஆகிய துறைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, சோப்பு மற்றும் தூய்மைப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன.
பிரிட்டன் பொருளாதாரம் இந்த ஆண்டில் 14 % வீழ்ச்சியடையும் என பேங்க் ஆப் இங்கிலாந்து எச்சரித்திருந்தது.