ரஷ்ய முதலீட்டு நிறுவனமான ஆர்டிஐஎப் நிதியுதவியுடன் கெம்ரார் என்னும் மருந்து நிறுவனம் அவிஃபேவிர் என்கிற மருந்தைத் தயாரித்துள்ளது. இதற்கு ரஷ்ய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் அளித்ததையடுத்து வரும் 11ஆம் தேதி முதல், நோயாளிகளுக்கு வழங்க உள்ளதாக ஆர்டிஐஎப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நோயாளிகள் விரைவில் குணம்பெறவும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு மாதத்துக்கு 60 ஆயிரம் பேருக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யும் திறனுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1990ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபேவிபிரவிர் என்னும் மருந்தில் சில மாற்றங்கள் செய்து அவிஃபேவிர் மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகவும், இது குறித்த விவரங்களை இரு வாரங்களில் வெளியிட உள்ளதகவும் கிரில் திமித்ரியேவ் தெரிவித்தார்.