செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்!

1 minutes read

பிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez யோடு இணைந்து 50.84% வாக்குகளப் பெற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் பிரான்சில் 95 ஆம் பிராந்தியத்தில் மீண்டும் துணை முதல்வராகவும், பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் இந்த மாநகரசபைத் தேர்தலில் ஆதி பரமேஸ்வரி சதாசிவம் (பாண்டிச்சேரி) மற்றும் கார்த்திக் சந்திரமூர்த்தி ஆகியோரும் மாநகரசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையை சேர்ந்த செல்லப்பா மகேந்திரன்-தேவி, தம்பதிகளின் புதல்வியான சேர்ஜியா பிரான்ஸின் சட்டத்துறையில் பட்டம் பெற்று ஒரு சட்டத் தரணியாக பணியாற்றுபவர்.

இளவயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்டு செயல்படும் இவரது மக்கள் நல பணிகளால் இவர் வாழும் கார்ஜ் லி கொணேஸ்(Garges les Gonesse) மட்டுமல்லாது அயல் கிராமங்களான சார்சேல் (sarcelles), டுனி (Dugny) போன்ற கிராமங்களில் வாழும் பலரும் சிறப்படைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More