நேட்டோ (NATO) எனப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புடன் சேர பின்லாந்து (Finland) விரும்பம் தெரிவித்துள்ளது.
மேற்டி அமைப்புடன் சேர்வது தம் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என பின்லாந்தின் பிரதமர் சன்னா மரீன் (Sanna Marin) தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் சேர்வதற்கான முயற்சிக்கு பின்லாந்தின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதாவது, 200 பாராளுமன்ற உறுப்பினர்களில் 184 பேர் ஆதரவாகவும் 7 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். ஒருவர் வாக்களிக்கவில்லை.