கோவை நவ இந்தியா ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் கோவை நன்னெறிக் கழகம் சார்பில் ‘நன்னெறிச் செம்மல்’ விருது மத்திய புலனாய்வு துறை முன்னாள் இயக்குனருக்கு வழங்கப்பட்டது, கோவை நன்னெறிக் கழகத்தின் 62-வது ஆண்டு விழா அதனையொட்டி மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களுக்கு
‘நன்னெறிச் செம்மல்’ விருதுதினை பாரதிய வித்யா பவன், கோவை கேந்திரத்தின் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் வழங்கினார், அருகில் சிறுதுளி வனிதா மோகன், இயகோகா சுப்பிரமணியன், கோவை நன்னெறிக் கழகம் செயலர் ஜெயச்சந்திரன், கங்கா மருத்துவமனை டாக்டர் ராஜசேகர், தமிழறிஞர் இருசுப்பிள்ளை ஆகியோர் உள்ளனர்.
சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன் அவர்கள் பேசியதாவது, நம் சமூகம் வாழ்கின்ற வாழ்க்கையை அற வாழ்க்கையாக வாழ்ந்தால் நாம் எதிர்நோக்கி இருக்கின்ற எதிர்கால வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமையும். நமது வாழ்க்கை முறை அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று நமது தமிழ் காப்பியங்கள் அனைத்தும் எடுத்துக் கூறுகின்றன. ஆண் பெண் இருவரும் அன்பால் இணையக்கூடிய வாழ்க்கையாக அமைய வேண்டும். நம் முன்னோர்களும் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நமக்கு உணர்த்திவிட்டு சென்றுள்ளனர் அறத்தையும் நன்னெறிகளையும் வாழ்க்கை முறையாக மேற்கொண்டவர்களுக்கு அவர்கள் ஈடுபட்டு வரும் எந்த செய்கையிலும் சிறப்பாகவே அவர்களுக்கு அமையும் என்கிறது தொல்காப்பியம் . வாணிபம், விவசாயமாக இருக்கட்டும், குலங்கள் பெருகும் என்று தொல்காப்பியம் கூறுகிறது. சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது என்நவென்றால் இன்னும் 25 ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இருக்க மாட்டார்கள் என்று கூறுகிறது இதை நாம் ஆராய்ந்து பார்த்தால் எப்படிப்பட்ட வாழ்க்கையை தற்போது நம் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. வாழுகின்ற வாழ்க்கையை அறத்தைக் கொண்டும் நன்னெறிகளை கொண்டும் வாழ்ந்தோமானால் நாம் எதிர்கால வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும் என்று பேசினார்
விருது வழங்கும் விழாவில் பாரதிய வித்யா பவன், கோவை கேந்திரத்தின் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர். மகாதேவன், நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயகோகா என். சுப்பிரமணியம், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன தலைவர் எம். கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்கள்.
நிகழ்வில் சச்சிதானந்தஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர் வழங்கும் ‘வாய்மையே வெல்லும்’ எனும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.