ரஸ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிடவேண்டும் இல்லையேல் பொருளாதார தடைகளை அதிகரிப்போம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள எஸ் 400 ஏவுகணைகளை வாங்குவது குறித்து இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது.
ரஸ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதற்கு அமெரிக்கா ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியா ஏவுகணைகளை வாங்கினால் இந்தியாவிற்கு எதிராக தடையை விதிப்பதை தவிர வேறு வழியில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.