உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
மிக முக்கியமாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1120 பேர் வரை பலியானதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி முழு இந்தியாவும் கொரோனாவினால் பாதிக்கப்படாமல் இருக்க தமக்கான பாதுகாப்பு முறைமைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் உள்ள மக்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சிறுவர்களுக்கு சலப்பா மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மதுபானத்தை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் இந்த மூட நம்பிக்கையான செயல் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்யவும் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.