இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பதிவிட்ட ட்வீட்டுக்கு மன்னிப்பு கோருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவ்வாக இருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகன் யெய்ர், தந்தையின் ஊழல் வழக்கு வழக்கறிஞரான லியாட் பென் ஆரியின் முகத்தை, துர்கா தேவி கடவுள் படத்துடன் ஒப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துர்கா தேவியின் படம் இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த ஒன்று என்பதை அறியாமல் பதிவிட்டதாக மன்னிப்பு கோரிய யெய்ர், அந்த பதிவை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.