தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சியே நடைபெறும். மக்களின் விருப்பமும் அதுதான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் வருடம், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
இத்தகையதொரு சூழ்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி அமைய வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர்.
மேலும், முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரிடையே ஒருமித்த கருத்து ஏற்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.