வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாள் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டமைக்க அவர் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.