மதுரை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்., முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ்காவல் அளித்த நிலையில் மதுரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் 2 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்த நிலையில், அடையாறு மகளிர் போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மணிகண்டனின் செல் போனை கண்டுபிடிக்கவும் அடையாறு மகளிர் போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி நெருக்கமாக பழகி சென்னை பெசன்ட் நகரில் தனி வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், கட்டாயப்படுத்தி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் அந்த புகாரில் நடிகை கூறி இருந்தார்.
சென்னையில் இருந்து அவரை மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறார்கள். மணிகண்டன் 2 செல்போன்கள் பயன்படுத்தி உள்ளார்.
ஆனால் சாதாரண செல்போன் மட்டுமே போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அவரது ஸ்மார்ட் போன் இதுவரை கிடைக்கவில்லை. மணிகண்டனும், நடிகை சாந்தினியும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களை சாந்தினி வெளியிட்டார். மேலும் இதேபோல் பல படங்கள் அவரது செல்போனில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே அந்த செல்போன் எங்கே? என்று போலீசார் மணிகண்டனிடம் விசாரித்து வருகிறார்கள்.