மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள எரவாடா பகுதியில் அடுக்குமாடி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று இரவு நேரத்தில் திடீரென அடித்தளத்தில் ஸ்லாப் இடிந்து விழுந்தது. இதில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் பலியான 5 தொழிலாளர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புனே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புனே கட்டுமான பணி விபத்தில் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பத்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.