கோழிப்பண்ணை புதருக்குள் சிக்கிக் கொண்ட மலைப்பாம்பு ஒன்றை இளைஞர் மீட்ட நிலையில் அவரது கையை சுற்றிக் கொண்ட மலைப்பாம்பு சீற்றத்துடன் இறுக்கி நொறுக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது
இந்தியாவின் கர்நாடக மாநிலம் காஜனூர் அடுத்த துங்கா அணை அருகே வனப்பகுதியில் இருந்து மலைப்பாம்பு ஒன்று கோழிப்பண்ணை அருகே உள்ள புதர் பகுதியில் சிக்கிக் கொண்டது.
பதுங்க இடந்தேடி கொடிகளுக்குள் சிக்கிய மலைப்பாம்பை பாம்புபிடி வீரர் கிரண் தலையை பிடித்து பத்திரமாக மீட்டார்கிரண் புதருக்குள் இருந்து மலைப்பாம்பை கழுத்தை பிடித்து வெளியே தூக்கிய நிலையில் சீற்றத்துடன் காணப்பட்ட மலைம்பாம்பு அவர கையை சுற்றி இறுக்கி நொறுக்க முயன்றது
வேகமாக செயல்பட்ட கிரண் கையை மாற்றி பிடித்து மலைப்பாம்பின் கழுத்தை நழுவ விடாமல் இறுகப்பிடித்துக் கொண்டதால் மலைபாம்பின் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்
அவரது கையை சுற்றிய மலைப்பாம்பை லாவகமாக ஒரு பையில் போட்டு எடுத்து சென்று அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்.