பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு மு.க.ஸ்டாலின் பதில்.குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியுள்ளார்.
“வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. தி.மு.க. என்பது குடும்ப இயக்கம் தான், தொண்டர்களை தம்பி என அழைத்தவர் அண்ணா. தி.மு.க.விற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் சொல்கிறார். பிரதமர் சொல்வது உண்மை தான், கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். தி.மு.க. மாநாடு நடத்தும்போதெல்லாம் குடும்பம் குடும்பமாக மாநாட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி தான் அழைப்போம். ”
மாநாட்டிற்கு மட்டுமல்ல, போராட்டத்திற்கும் கூட குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து கலந்து கொள்வது தான் தி.மு.க.வின் போராட்டம். பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.”
எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் ஏற்பட்ட அச்சத்தால் தான் பிரதமர் மோடி இறங்கிவந்து பேசுகிறார். பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் செல்லாதது ஏன்? எனவும் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.