இந்தியாவின் இமாச்சலம் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைகாரணமாக யமுனை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக யமுனை நதியில் 205.6 மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்தாலே அபாயகர அளவாக உள்ள நிலையில் தற்போது 207.55 மீட்டர்-ஆக பதிவாகியுள்ளதாக மத்திய நீர் ஆணையம் அறிவித்துள்ளது.
யமுனை நதியின் கரையோரப்பகுதிகளுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கும் செல்லக்கூடாது என டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெள்ளத்தால் சுமார் ரூ.4000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை மேற்கும் பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றது.