அதிமுகவை முட்டும் அண்ணாமலை . தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையின் கடந்த 28 ஆம் திகதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடை பயணத்தை தொடங்கியனார். இன்று 8வது நாளாக நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் – டிவிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றுக்கான ஆரம்ப சலுகைகள் 65% வரை தள்ளுபடிஇந்த நடை பயணத்தின் போது திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலை,கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சாதனைகளையும் விளக்கி வருகிறார்.
செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அண்ணாமலையும் மக்களின் குறைகளை கேட்டறிவதோடு புகார் மனுக்களையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் அண்ணாமலையின் நடை பயணத்தை தமிழகத்தின் காங்கிரஸ் , திமுக , அதிமுக தரப்பு என்று அனைத்து தரப்பும் கடுமையாக கண்காணித்து வருவதுடன் விமர்சித்தும் வருகிறது. இதில் கேஎஸ் அழகிரி “டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி, தமிழகத்தில் அண்ணாமலை மேற்கொண்டு வருவது நடைபயணம் அல்ல என்றார்.
மேலும் நடைபயணம் செய்வதாக சொல்லிவிட்டு அண்ணாமலை சொகுசு பயணம் செய்கிறார் என்றும் கேஎஸ் அழகிரி விமர்சித்தார். தமிழகத்தில் ஆளுங்கட்சியை விளம்பரத்திற்காகவே குறை சொல்கிறார்கள் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவரான கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாமலையெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என கூறியுள்ளார்.
அண்ணாமலை, யார் பேச்சுக்கு பதில் கூற வேண்டும் என்று ஒரு தரம் உள்ளது என்றார். அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் கூறி தனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது என்றும் அண்ணாமலை காட்டமாக கூறினார்.
அண்ணாமலை அதிமுகவினர் குறித்து இதுபோன்று விமர்சனம் செய்வதை நிறுத்தாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர் கூறியுள்ளார்.
மேலும் அதிமுகவை தொட்டான்… அவன் கெட்டான்… இது அண்ணாமலைக்கும் தெரியும் என்பதால் இதுபோன்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு என்றார்.