பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு . காவிரி விவகாரம் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் பற்றி எரிந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் காவிரியில் இருந்து தர மாட்டோம் என்று கர்நாடகா அரசு கூறி வந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றின் உத்தரவால் வேறு வழியின்றி காவிரி நீரை திறந்து விட்டுள்ளது.
வினாடிக்கு 5000 கனஅடி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விட உத்தரவிடப்பட்ட சூழலில், வெறும் 4,600 அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில், காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.