பொலிஸார் பின்தொடர்ந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை 16:55 GMT மணிக்கு கிளாபமில் மோட்டார் சைக்கிளை நிறுத்தத் தவறிய இருவரை அதிகாரிகள் பின்தொடர்ந்தாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் கால் நடையாகத் தப்பிச் செல்லும் போது கைவிடப்பட்ட துப்பாக்கி தரையில் பட்டதால் வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
27 மற்றும் 36 வயதுடைய இரண்டு பெண்கள், துப்பாக்கி சூட்டால் காயம் அடைந்துள்ளனர், அவர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி சூடு மீட்கப்பட்டதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.