மேற்கு இலண்டனில் இளைஞனை சுட்டுக் கொன்ற கொலையாளியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேற்கு கென்சிங்டனில் கொலை நடந்த இடத்திற்கு அருகில் வசித்த ஜனயோ லூசிமா, 21, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கட்கிழமை இரவு 10.15 மணியளவில், அங்குள்ள குடியிருப்பில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
இதன்போது, அங்கு குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
“இந்த பயங்கரமான சம்பவம் மாலையில் பரபரப்பான நேரத்தில் நடந்தது, அந்த பகுதியில் பலர் வெளியே செல்வார்கள், வேலை முடிந்து வீட்டிற்கு வருவார்கள்.
இந்த வீதி வழியாக பலரும் வாகனத்தில் வருகின்றனர். எனவே கொலையாளியை பற்றிய தகவல்களை அவர்களிடம் கேட்க ஆவலாக உள்ளேன்” என, விசாரணையை வழிநடத்தும் பொலிஸ் அதிகாரி பிரையன் ஹோவி கூறினார்.
தகவல் தெரிந்த எவரும் அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசுமாறும் அல்லது 101 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.