வவுனியா ரம்பைக்குளம் பெண்கள் கல்லூரியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி யூட் மடுத்தீன் மரணமடைந்துள்ளார். வவுனியாவில் கல்வித்துறைக்கு பெரும் சேவை செய்த இவர் நெருக்கடியான காலங்களில் பெரும் சவால்களை சந்தித்தவர். இரும்புப் பெண்மணியாக, சிறந்த தலைமை ஆசிரியராக, பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பான அன்னையாக தனது கடமையை செய்தவர்.
வவுனியாவில் பல ஆளுமைகளை உருவாக்கிய பெரும் தூண். கல்விக்காக ஓயாது உழைத்த ஆன்மா இன்று ஓய்வெடுத்து கொள்கின்றது. அவரது உடல் யாழ் பிரதான வீதியில் உள்ள புனித திருக்குடும்ப கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டுள்ளது, இறுதிக் கிரியைகள் 07/09/2018 பி.ப 3 மணிக்கு இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருட்சகோதரி யூட் மடுத்தீன் அவர்களுக்கு வணக்கம் லண்டன் தனது அஞ்சலிகளைச் செலுத்துகின்றது.