.
அரசியல் மாற்றத்தால் அதிரும் கொழும்பு. கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
இன்றைய தினம் பல விடையங்கள் காலையிலிருந்து நடைபெற்று வரும்வேளையில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என சுனந்த தேசப்பிரிய உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஆருடம் தெரிவித்துள்ள நிலையில் பாராளுமன்ற கலைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் களம் ஐ தே க க்கு மீண்டும் பாதகமாக திரும்பியுள்ள நிலையில் கட்சியின் தலைமையில் உறுதிமிக்க ஒருவரை ஐ தே க நியமிக்க வேண்டியுள்ளது. பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்கும் நிலையிருந்தால் ரணிலின் பக்கம் வெற்றிக்கான சந்தர்ப்பங்கள் கடந்த சில நாட்களில் அதிகரித்திருந்தன அனால் தற்போது ஒரு பொதுத்தேர்தலை ஐ தே க எதிர்நோக்கியுள்ளது. கடந்த உள்ளூராச்சித் தேர்தலில் மகிந்த ஆதரவு கடும்போக்கு கட்சிகள் கணிசமான வெற்றியைப் பெற்றிருத்தமை ஐ தே க க்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த நிலையில் ஐ தே க யைதூக்கி நிமிர்த்தக்கூடிய ஒருவர் சஜித் பிரேமதாசா என பெரும்பாண்மையானோர் நெருக்குவதால் ரணில் தலைமைப் பொறுப்பை விட்டுக்கொடுக்கவேண்டியுள்ளது.
இன்னும் சில மணிகளில் முடிவு தெரியலாம். ரணிலின் கனவு கரையுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
வணக்கம் இலண்டனுக்காக
இலங்கை அரசியல் நிலவர சிறப்பு செய்தியாளர்
அருண்மொழிவர்மன்