கிளி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் இன்று (14/07/19) முல்லைத்தீவு மாவட்டத்துக்கான 50 துவிச்சக்கர வண்டிகளை 9 வது கட்டமாக முள்ளிவாய்க்கால் பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
போரினால் பேரழிவுக்கு உள்ளான பிரதேசங்களான முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், உடையார்கட்டு, கைவேலி, தேவிபுரம், புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு போன்ற பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான “மண்ணின் மைந்தன்” வைத்தியர் சத்யமூர்த்தி, கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி செயலணியின் பிரதான செயல்பாடடாளர் சிவரூபன், செயலாளர் ரவீந்திரன் உப தலைவர் ஜீவநாயகம் பிரான்ஸ் நவீனா நற்பணி மன்றத்திலிருந்து ரங்கன் சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராஜா, முள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலய அதிபர் திரு விக்னேஸ்வரன் மற்றும் அப்பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் பயன்பெறும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கிளி மக்கள் அமைப்பின் பொருளாளர் கணேசலிங்கம், கள உத்தியோகத்தர் சந்திரமோகன் மற்றும் கிளி மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.