உரிய தகுதிகளின் அடிப்படையில் கடந்த அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட சமுர்த்தி ஊழியர்களில் சுமார் 1400 பேர் முறையான காரணங்களுமின்றி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தினால் அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி இது என பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.