7
நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் T.M.J.W. தென்னகோன் கூறியுள்ளார்.
விடுதலை செய்யப்படும் கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதுடன், பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.