பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் துறை (NHS) புதிய தற்காலிக வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகின்றது.
இலண்டனில் உள்ள எக்ஸல் மண்டபத்தினை கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்காக சிறப்பு வைத்தியசாலையாக மாற்ற NHS நடவடிக்கை எடுக்கின்றது. சுமார் 4000 நோயாளர்களுக்கு ஒரே நேரத்தில் தீவிர சிகிச்சை வழங்கும் அதி நவீன வைத்தியசாலையாக மாற்ற உள்ளார்கள்.
இதற்கான நிர்மாண வேலைகளுக்கு NHS ஊழியர்களுடன் பிரித்தானிய படையினரையும் ஈடுபத்த உள்ளார்கள்.
மிகப்பிரமாண்டமான மண்டபமான EXCEL கடந்த 2000 ஆண்டு திறந்து வைக்கப்பட்டு மிகப்பெரிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இங்கேதான் வருடம்தோறும் மாவீரர் நாள் நிகழ்வும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.