பிரித்தானியாவில் புதிதாக அமைக்கப்படும் தற்காலிக வைத்தியசாலைக்கும் ஏனைய தடுப்பு நடவடிக்கைக்கும் மேலதிக சுகாதார சேவையாளர்கள் தேவைப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் மற் ஹன்கூக் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு மேலதிக தொண்டர்களின் தேவை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில் இலண்டனில் உள்ள எக்ஸல் மண்டபத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்காக அமைக்க உள்ள சிறப்பு வைத்தியசாலைக்கு “தற்காலிக நைற்றின்கேல் வைத்தியசாலை ” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.