0
புறக்கோட்டையின் போதிராஜ மாவத்தையில் இரண்டு கட்டடங்கள் நேற்றுக் காலை திடீரென தீப்பற்றின.
காகிதாதிகள் விற்பனை செய்யப்படும் கடைகள் அடங்கிய இரண்டு கட்டடங்களே இவ்வாறு தீப்பற்றியதுடன் சம்பவத்தில் இரு கடைகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
தீயணைப்பு நடவடிக்கைகளில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இத்தீ பரவியமைக்கான காரணம் நேற்று மாலை வரை கண்டறியப்படவில்லை.