ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று அறிவித்தார்.
17ஆம் திகதி காலை 9 மணிக்கு களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமாகும் பாதயாத்திரை, 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என வும் அவர் கூறினார். இது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டம் என்பதால் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW