மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த இரு இளைஞர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.