8
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று (30) காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
மாதம் தோறும் 30 ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டத்தில் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், படங்களையும் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.