யாழ்ப்பாணம் பருத்தித்துறை, திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரள கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.
குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திக்கம் , தும்பளை மற்றும் பலாலி அந்தோணிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் , அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.