0
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட Hope Worldwide அமைப்பினால் 2.74 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக, அறிவித்துள்ளது.
அதற்கமைய 12 மில்லியன் டொலர் கடந்த வாரத்தில் அமெரிக்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட மொத்த மருத்துவ உதவிகளின் பெறுமதியை எட்டியுள்ளதாக, தூதரகம் தெரிவித்துள்ளது.