0
இலங்கை மத்திய வங்கியானது, அதன் கொள்கை வட்டி வீதங்களை மாற்றமன்றி அதே மட்டத்தில் பேண முடிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நேற்று (05) நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை 14.5% ஆகவும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 15.5% ஆகவும் பேணத் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய,
- நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR): 14.50%
- நிலையான கடன் வசதி விகிதம் (SLFR): 15.50%
- நியதி ஒதுக்கு விகிதம் (SRR): 4%