0
இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியுள்ளதுடன், பொது அலுவல்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் கூட்டமும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.