8,000 இலிருந்து 4,000 ஆகக் குறையவுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்
இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறை மையினை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
அதன்படி, அடுத்த தேர்தலுக்கு முன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள்) உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என்றும் “மக்கள் சபை” வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.