வெளிநாட்டுக்கு பெண்கள் வேலைக்கு செல்ல தடை என்று பல ஊடகங்களிலும் இன்று பேசு பொருளாக உள்ள விடயம் என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு 5 வயதுக்கும் குறைந்த பிள்ளை இருப்பின் அவர் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக செல்ல தடை விதிக்க பட உள்ளது
இதற்கான சட்டங்களை மீண்டும் கொண்டுவர போவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது இரண்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாட்டுக்கு தொழிலுக்காக செல்லலாம் என்ற அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
அந்தத் தீர்மானமானது பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் பெருமளவு சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.