நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பலதரப்பட்ட திட்டங்களையும் , வெளிநாட்டு கடன்களையும் மற்றும் நன்கொடைகளையும் அரசாங்கம் எதிர்பார்த்து உள்ள நிலையில்; மாகாண சபைகள் இந்த நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாது தன்னிச்சையாக செயற்படுவதாக கணக்காய்வு திணைக்களம் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து உள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வூதியம் பெறும் வயதில் உள்ள அனைத்து அரசஉத்தியோகத்தர்களுக்கான வர்த்தமானி வெளியிட பட்ட போதிலும் சில மாகாணங்களில் ஆளுநரின் உத்தரவில் இன்னும் சிலர் வேலை செய்ய நியமிக்க பட்டதாக நிதியமைச்சை விழித்து இந்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது