சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 21வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில்கையொப்பமிட்டுள்ளார்.
இந்த திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று (01.11.2022) காலை கையொப்பமிட்டுள்ளார்.
இதன்படி, சபாநாயகரின் கையொப்பம் இடப்பட்ட தருணத்திலிருந்து 21வது அரசியலமைப்பு திருத்தம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் செலுத்தப்பட்ட நிலையில், எதிராக ஒரு வாக்கும் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.