ஆட்பதிவுத் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று (01.11.2022) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, முதன்முறையாக தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டையின் நகலைப் பெறுவதற்கான கட்டணம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய அடையாள அட்டையின் திருத்தப்பட்ட பிரதியை வழங்குவதற்கு 500 ரூபாயும் காலாவதியான தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டையைப் பெறுவத்கு 200 ரூபாயும் அறவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்திற்கு மேலதிகமாக 2000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.