1
இலங்கையில் இருந்து இன்று காலை 5 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பிச் செல்லும் நிலையில் இன்று காலையும் 5 பேர் தமிழகத்தின் தனுஸ்கோடியை அண்டிய முதலாவது தீடையைச் சென்றடைந்துள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு சென்றுள்ளனர்.
ஐவரையும் மரையன் பொலிஸார் மீட்டு மண்டபம் கொண்டு சென்றுள்ளனர்.